50 கைதிகள் தப்பியோட்டம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50 கைதிகள் தப்பியோட்டம்

by Staff Writer 11-12-2023 | 9:52 PM

Colombo (News 1st) வெலிக்கந்தை கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து சுமார் 50 கைதிகள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தப்பியோடியவர்களைக் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய 21 பேர் மீண்டும் பொலிஸில் சரணடைந்த நிலையில் சுங்காவில பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.