.webp)
Colombo (News 1st) ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலின் காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவலாளி தங்கும் அறையில் இருந்து இன்று (09) காலை அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காவலாளியின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும், சந்தேகநபர் பள்ளிவாசலுக்குள் நுழையும் காட்சிகள் CCTV-இல் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஹட்டன் - ஹிஜிராபுர பகுதியை சேர்ந்த 04 பிள்ளைகளின் தந்தையான 67 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.