.webp)
Colombo (News 1st) வடக்கு ரயில் மார்க்கத்தில் மஹவையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணிக்கும் ரயில் சேவை அடுத்த மாதம் 07 ஆம் திகதியிலிருந்து 06 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
எனவே, அடுத்த மாதம் 07 ஆம் திகதி முதல் கொழும்பு - கோட்டையிலிருந்து மஹவ வரையிலும் காங்கேசன்துறையிலிருந்து அநுராதபுரம் வரையிலும் ரயில் சேவை முன்னெடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.