.webp)
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர இன்னும் 2 மணித்தியாலங்கள் செல்லக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது
மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் நொயல் பிரியந்த தெரிவித்தார்.
இதனிடையே, அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று (09) மாலை 05 மணி முதல் நாளை மறுதினம் (10) காலை 09 மணி வரை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அம்பத்தலே நீர் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.