சீனாவிற்கு கறுவாப்பட்டை ஏற்றுமதி

2024 முதல் இலங்கையில் இருந்து சீனாவிற்கு கறுவாப்பட்டை ஏற்றுமதி

by Staff Writer 08-12-2023 | 3:47 PM

Colombo (News 1st) உள்நாட்டு கறுவாப்பட்டைக்கு  சீன சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றது.

இதனால் வருடாந்தம் இரண்டு பில்லியன் டொலர் பெறுமதியான கறுவாவை சீனாவிற்கு அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இந்த ஏற்றுமதியானது நாட்டின் கறுவா சந்தைக்கு பெரும் அனுகூலமாகும் என கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக்க லிந்தர தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பலனாக அண்மையில் ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.