.webp)
Colombo (News 1st) புதிய மின்சார சபை சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்படுள்ளது.
மின்சாரத்துறை தொடர்பான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த தேவையான விதிமுறைகளை தயாரித்தல், அதற்காக தேசிய மின்சார ஆலோசனைக் குழுவை ஸ்தாபித்தல் என்பன இந்த சட்டமூலத்தினுடாக எதிர்பார்க்கப்படுகின்றது.
மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் வர்த்தகத்திற்கான நிறுவனங்களை ஸ்தாபிக்கவும் இதனூடாக முன்மொழியப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 05 ஆம் திகதியிடப்பட்டுள்ள இந்த மேலதிக வர்த்தமானி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரின் பணிப்புரைக்கமைய வௌியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாக இன்றைய பாராளுமன்ற அமர்வில் வௌிக்கொணரப்பட்டது.