கொழும்பில் 7 கோடி ரூபா பணத்துடன் இளைஞர்கள் 7 பேர்

கொழும்பில் 7 கோடி ரூபா பணத்துடன் இளைஞர்கள் 7 பேர் கைது

by Bella Dalima 08-12-2023 | 3:14 PM

Colombo (News 1st) கொழும்பின் முன்னணி ஹோட்டலொன்றுக்கு அருகாமையில் 7 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்துடன்  இளைஞர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சேதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயணித்த 2 கார்களும் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.