டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

by Staff Writer 07-12-2023 | 10:46 AM

Colombo (News 1st) மேல், தென், சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் இம்மாதம் 22 ஆம் திகதி வரை கண்டி மாவட்டத்தில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் இதுவரை 78322 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மழையுடனான வானிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.