சிலாபம் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்

சிலாபம் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்

by Staff Writer 07-12-2023 | 12:04 PM

Colombo (News 1st) சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக விமல்சிறி ஜயசூரிய ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸினால் புதிய ஆயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பேராயர் பிரையன் உடைக்வே ஆண்டகை நேற்று(06) இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

சிலாபம் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றிய வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை, கண்டி மறைமாவட்டத்திற்கான ஆயராக நியமிக்கப்பட்டதை அடுத்து, சிலாபம் மறைமாவட்ட ஆயர் பதவி வெற்றிடமாகியது.