நெடுந்தீவு கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த 22 இந்திய மீனவர்கள் கைது

by Staff Writer 07-12-2023 | 10:50 AM

Colombo (News 1st) Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் 14 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று(07) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களும் இராமேஸ்வரத்தை சேர்ந்த 08 மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.