.webp)
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி நேற்றிரவு(04) நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாயில் இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 30 ஆம் திகதி நாட்டிலிருந்து சென்றிருந்தார்.
மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, காலநிலை நீதி ஒன்றியத்திற்கான முன்மொழிவையும் சமர்ப்பித்தார்.