.webp)
Colombo (News 1st) இன்று (05) முதல் மழையுடனான வானிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக்ஜம் புயலின் தாக்கம் குறைவடைந்து வருவதால், மழையுடனான வானிலை குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றிரவு இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக்ஜம் புயல், தற்போது தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகர்கின்றது.