ரணில் விக்ரமசிங்க - நரேந்திர மோடி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

by Bella Dalima 02-12-2023 | 3:25 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக தனது X தளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று உரையாற்றினார்.

இந்த மாநாட்டின் போது கிரேக்கத்தின் பிரதமரையும் ஜனாதிபதி சந்தித்தார்.