சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது: லிட்ரோ தெரிவிப்பு

by Bella Dalima 02-12-2023 | 5:18 PM

Colombo (News 1st) சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாதென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 3565 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1431 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக லிட்ரோ நிறுவனம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோ கிராம் எரிவாயு விலை 668 ரூபாவாகும்.

இதனிடையே, தமது எரிவாயு விலைகளிலும் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாதென லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 3985 ரூபாவாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

5 கிலோ எடை கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 1595 ரூபாவாகும்.