விவசாயிகளுக்கான அறிவுறுத்தல்

வவுச்சர்கள் மூலம் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் உரத்தை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

by Bella Dalima 01-12-2023 | 4:05 PM

Colombo (News 1st) வவுச்சர்கள் மூலம் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் உரத்தை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் 

சிறுபோகத்தில் யூரியா உரத்திற்காக வழங்கப்பட்ட வவுச்சர்கள் மூலம் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர்  உரத்தை கொள்வனவு செய்யுமாறு விவசாய அமைச்சினால் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வவுச்சர்களை பெற்றுக்கொண்ட விவசாயிகளில் சிலர், இதுவரை உரத்தை கொள்வனவு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உரத்தை பெற்றுக்கொள்ளாத விவசாயிகளுக்கு, அந்த வவுச்சர்களை இம்முறை பெரும்போகத்தில் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.