வெட்டுப்புள்ளிகள் வௌியீடு

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியீடு

by Bella Dalima 01-12-2023 | 3:22 PM

Colombo (News 1st) 2022 உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. 

இதற்கமைய, 45,000-இற்கும் அதிகமானோர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இம்முறை புதிய பட்டப்படிப்புகளுக்கான கற்கைநெறிகள் சிலவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தள பக்கத்தில் வெட்டுப்புள்ளிகளை பார்வையிடலாம் 


https://www.ugc.ac.lk/index.php?option=com_content&view=article&id=2021&Itemid=163&lang=ta