.webp)
Colombo (News 1st) பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உறுதிப்படுத்தினார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன், பதில் பொலிஸ்மா அதிபராக 3 மாத காலத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நியமனம் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.