மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அறிவித்தல்

விநியோகிக்கப்படாத 9 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்க நடவடிக்கை

by Staff Writer 30-11-2023 | 12:29 PM

Colombo (News 1st) விநியோகிக்க முடியாமல் போயுள்ள சாரதி அனுமதிப் பத்திரங்களை அடுத்த 6 மாதங்களுக்குள் விநியோகிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

9 இலட்சத்திற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் இவ்வாறு தேங்கியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான அச்சு இயந்திரம் இல்லாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை, 3 புதிய அச்சு இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.