ஹோட்டல் முகாமையாளர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை

வத்தளையில் ஹோட்டல் முகாமையாளர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை

by Bella Dalima 29-11-2023 | 7:13 PM

Colombo (News 1st) வத்தளை - எலக்கந்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலின் முகாமையாளர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வருகை தந்த நால்வரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையை சேர்ந்த 68 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.