ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மருத்துவ விநியோகப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

by Bella Dalima 29-11-2023 | 7:24 PM

Colombo (News 1st) சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட ஐவர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், கடந்த நாட்களில் முன்னெடுத்த விசாரணைகளில், மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்ரமநாயக்கவும் மேலும் 03 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு முன்னர் மருந்து விநியோகத்தை முன்னெடுத்ததாக கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டிருந்தார்.