.webp)
Colombo (News 1st) 150 வருடங்களுக்கு மேலாக நெதர்லாந்தின் வசமிருந்த இலங்கைக்கு சொந்தமான 6 தொல்பொருட்கள் இன்று(29) மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட குறித்த தொல்பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டன.
நெதர்லாந்து தூதுவரினால் குறித்த பொருட்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.