O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படவுள்ளன

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மூன்று நாட்களுக்குள் வௌியிட எதிர்பார்ப்பு

by Bella Dalima 29-11-2023 | 5:34 PM

Colombo (News 1st) கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளை வௌியிடுவதற்கு தாமதம் ஏற்படுகின்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர இன்று சபையில் கேள்வியெழுப்பினார். 

இதற்கு பதில் வழங்கிய போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார். 

எதிர்காலத்தில் பரீட்சை பெறுபேறுகளை வௌியிடுவதற்கான உறுதியான தினமொன்றை அறிவிப்பது தொடர்பில் திட்டமிடப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதன்போது குறிப்பிட்டார்.