.webp)
Colombo (News 1st) நீர் கட்டணங்களுக்கான சூத்திரத்தை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
உத்தேச நீர் கட்டண சூத்திரத்தை டிசம்பர் மாதத்தில் தயாரித்து முடிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனூடாக மதவழிபாட்டுத் தலங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்கு நியாயமான கட்டணத்தின் அடிப்படையில் நீரை விநியோகிக்க முடியும் என அவர் கூறினார்.
வணிக நிறுவனங்களுக்கான நீர் கட்டண சூத்திரம் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.