மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை தொடர்பான மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

by Staff Writer 28-11-2023 | 6:18 PM

Colombo (News 1st) கிரிக்கெட்  இடைக்கால நிர்வாக சபைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான மேலதிக பரிசீலனை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 கிரிக்கெட்  இடைக்கால நிர்வாக சபையை நியமித்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் வௌியிட்ட வர்த்தமானி தொடர்பில் எதிர்வரும் வழக்கு விசாரணை தினம் வரை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பதாக புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாக்குறுதி வழங்கினார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர், தமது நிலைப்பாடு தொடர்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி மன்றில் விடயங்களை முன்வைக்கவுள்ளார்.