.webp)
Colombo (News 1st) காஸா எல்லையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்கும் கட்டாரினால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பினராலும் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஏனைய சில பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு இந்த தற்காலிக போர் நிறுத்த நீடிப்பு உதவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை முதல் 04 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டதுடன், நேற்றுடன் அது நிறைவுக்கு வரவிருந்த நிலையில் மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் போர் நிறுத்த நீடிப்பு தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 15,000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.