14 இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்கவுள்ள ஹமாஸ்

42 பாலஸ்தீன பணயக்கைதிகளுக்கு ஈடாக 14 இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்கவுள்ள ஹமாஸ்

by Bella Dalima 25-11-2023 | 7:27 PM

இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. 

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, இரு தரப்பும் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றன. 

இதன் அடுத்த கட்டமாக 42 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக 14 இஸ்ரேல் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. 

இரு தரப்புகளுக்கும் இடையே மத்தியஸ்தர்களாக செயற்படும் எகிப்தும் கத்தாரும் ஹமாஸ் வழங்கிய பட்டியலை இஸ்ரேலிடம் வழங்கியுள்ளன. 

ஹமாஸ் அமைப்பினர் இதுவரை 240 பணயக்கைதிகளில் 24 பேரை விடுதலை செய்துள்ள நிலையில், அதற்கு ஈடாக இஸ்ரேல் 39 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்துள்ளது.