.webp)
பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையிடம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா வழங்கியுள்ளது.
பதிவு செய்யப்பட்ட பாலஸ்தீன அகதிகளுக்கு நேரடி நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்துள்ளது.
பாலஸ்தீன அகதிகளுக்கு கல்வி, சுகாதாரம், நிவாரணம் மற்றும் சமூக சேவைகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு பல்வேறு நாடுகளும் நிறுவனங்களும் உதவிகளை வழங்கி வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக நேற்று 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா வழங்கியுள்ளது.
காஸாவில் மனிதாபிமான தேவைகள் அதிகரித்து வரும் நிலைமையில், இவ்வாறான உதவிகள் அத்தியாவசியமானவை என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.