.webp)
Colombo (News 1st) கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கீரி சம்பா அரிசி பற்றாக்குறைக்கான தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார்.
கீரி சம்பா அரிசியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகும்.
இதனிடையே, தனியார் துறையினர் வசம் காணப்படும் சீனித் தொகையை அரசாங்கத்தின் ஊடாக, சதொச பல்பொருள் அங்காடிகளின் மூலம் விற்பனை செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.