.webp)
Colombo (News 1st) ஆறாவது தடவையாக கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி சுவீகரித்தது.
இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்களினால் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.
விமான சாகசத்துடன் போட்டி ஆரம்பமானது.
தீர்மானம் மிக்க போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன் பிரகாரம் இந்திய அணியின் ஆரம்ப வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கியது.
சுப்மன் கில் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அணித் தலைவர் ரோஹித் சர்மா 47 ஓட்டங்களை பெற்ற போது மெக்ஸ்வெலின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயஸ் ஐயர் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
விராத் கோலி 54 ஓட்டங்களை பெற்றார்.
அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் 3 விக்கெட்களை பெற்றார்.
இதன் பிரகாரம் 50 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி சகல விககெட்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.
241 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரர்களாக டேவிட் வோனர் மற்றும் ட்ரவஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.
டேவிட் வோனர் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மிச்சல் மார்ஸ் 15 ஓட்டங்களை பெற்றதுடன் ஸ்டீவன் ஸ்மித் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் சேர்ந்த மானஸ் லபுசெய்ன் மற்றும் ட்ரவஸ் ஹெட் ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.
4 ஆவது விக்கெட்டிற்காக 192 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்திய ட்ரவஸ் ஹெட் 137 ஓட்டங்களை பெற்றதுடன் மானஸ் லபுசெய்ன் ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களை பெற்றார்.
இதன் பிரகாரம் உலகக் கிண்ண வரலாற்றில் 6 ஆவது தடவையாகவும் அவுஸ்திரேலியா கிண்ணத்தை சுவீகரித்தது.