சிறுபோகத்தில் சேதமடைந்த பயிர்களுக்காக நட்டஈடு

அங்குணுகொலபெலஸ்ஸவில் 250 விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது

by Bella Dalima 18-11-2023 | 4:01 PM

Colombo (News 1st) சிறுபோகத்தில் சேதமடைந்த பயிர்களுக்கான நட்டஈடு நாளை (19) முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
முதற்கட்ட இழப்பீடுகளின் கீழ் 389 மில்லியன் ரூபாவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க விவசாய மற்றும் கிராமிய காப்புறுதி சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

இதற்கமைய, நாளை காலை 09 மணி முதல் அங்குணுகொலபெலஸ்ஸவில் 250 விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

கடந்த முறை சிறுபோகத்தில் 65 ஆயிரம் ஏக்கர் வறட்சியினால் சேதமடைந்துள்ளதுடன், 11,000 ஏக்கர் நெற்செய்கை அறுவடைக்கு தயாராகவிருந்த நிலையில் மழையினால் அழிவடைந்தது.