.webp)
Colombo (News 1st) உணவு பணவீக்கம் அடுத்த ஆண்டில் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை புரிந்துகொள்வதற்காக உணவு உற்பத்தி தொடர்பான அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.