12,000 ஏக்கர் நெற்செய்கை மழையினால் அழிவு

அறுவடைக்கு தயாராகவிருந்த 12,000 ஏக்கர் நெற்செய்கை மழையினால் அழிவு

by Bella Dalima 10-11-2023 | 5:27 PM

Colombo (News 1st) அறுவடைக்கு தயாராகவிருந்த 12,000 ஏக்கர் நெற்செய்கை மழையினால் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் ஒன்றரை மாதங்களாக பெய்து வரும் மழையினால், சில பகுதிகளில் வயல் நிலங்களுக்கு பாரியளவு சேதமேற்பட்டுள்ளதாகவும் வௌ்ள நிலைமையால் நெற்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இதற்கு முன்னர் நிலவிய வறட்சியினால் 64,088 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாதிப்படைந்த செய்கை நிலங்களுக்கான இழப்பீட்டை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவும் விவசாய காப்புறுதி சபையின் தலைவரும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.