வாகன இறக்குமதி இடைநிறுத்தம்

பொது போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்

by Bella Dalima 09-11-2023 | 5:17 PM

Colombo (News 1st) பொது போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இனி எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. 

வாகன இறக்குமதி தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக ஜனாதிபதி செயலகம் விசேட குழுவொன்றை நியமித்திருந்தது.

வாகனங்களின் தேவைகள், வீதிகளுக்கான இட வசதி, எரிபொருள் செலவு போன்றவற்றில் விசேட கவனம் செலுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.