உளுந்து, கௌப்பி, பயறு இறக்குமதிக்கு முன்மொழிவு

உளுந்து, கௌப்பி, பயறு இறக்குமதிக்கு அமைச்சரவையிடம் கோரிக்கை

by Bella Dalima 07-11-2023 | 3:30 PM

Colombo (News 1st) உளுந்து, கௌப்பி மற்றும் பயறு போன்ற தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து உணவு பாதுகாப்பு குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தானியங்களை மீள இறக்குமதி செய்ய அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதால் உளுந்து, கௌப்பி மற்றும் பயறு போன்ற தானியங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதாகவும், தற்போது மக்களின் நுகர்வு அதிகரித்துள்ளதால், இறக்குமதி செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தற்போதைய தட்டுப்பாடு காரணமாக குறித்த தானியங்களின் விலை அதிகரித்து காணப்படுவதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறினார்.