லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

by Bella Dalima 04-11-2023 | 4:35 PM

Colombo (News 1st) இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 3,565 ரூபாவாகும். 

அத்துடன், 05 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,431 ரூபாவாகும். 

2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலையானது 650 ரூபாவில் இருந்து 668 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.