இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3% வலுவடைந்துள்ளது

இவ்வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளது.

by Staff Writer 04-11-2023 | 3:13 PM

Colombo (News 1st) இவ்வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில்,  வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளது.

இந்திய ரூபாவிற்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.9% வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ அலகுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கை ரூபாவின் பெறுமதி 10.9 வீதம் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.