.webp)
Colombo (News 1st) லிட்ரோ எரிவாயு விலை நாளை (04) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு விலை 75 முதல் 90 ரூபாவிற்கு இடையே உயர்வடையலாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட விலைகள் நாளை காலை அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.