.webp)
Colombo (News 1st) இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 2018 ஆம் ஆண்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் 12 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை கொழும்பில் நேற்று (01) நடைபெற்றது.
நாட்டின் பிரதான ஏற்றுமதி சந்தைகளை பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம், ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்காக ஆசியா மற்றும் கிழக்காசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் இணைவதே இதன் நோக்கமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை 29 ஆம் திகதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இடைநிறுத்தப்பட்டுள்ள, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மீண்டும் முன்னெடுக்க இருநாட்டு தலைவர்களும் இணங்கியிருந்தனர்.