தேயிலைக்கான உரத்தை உற்பத்தி விலைக்கே வழங்க இணக்கம்

தேயிலை செய்கைக்கு தேவையான உரத்தை உற்பத்தி விலைக்கே வழங்க இணக்கம்

by Staff Writer 02-11-2023 | 4:03 PM

Colombo (News 1st) தேயிலை செய்கைக்கு தேவையான உரத்தை உற்பத்தி விலைக்கே வழங்க அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் இணங்கியுள்ளன.

உரத்தை நிவாரண விலைக்கு வழங்குமாறு தேயிலை உற்பத்தியாளர்களின் சுயாதீன சங்கம், விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்று (01) கோரிக்கை விடுத்திருந்தது.

அரசாங்கத்திற்கு சொந்தமான லங்கா உர நிறுவனமும் கொமர்ஷல் உர நிறுவனமும் தேயிலை, தெங்கு உள்ளிட்ட பெருந்தோட்டப் பயிர்களுக்கான விசேட கலவை உரங்களை உற்பத்தி செய்கின்றன.

இவை தேயிலை உற்பத்திக்கு மிகப்பொருத்தமானவை என்பதுடன், அவற்றை நிவாரண விலைக்கு வழங்குமாறு, இரண்டு உர நிறுவனங்களினதும் தலைவரான கலாநிதி ஜகத் பெரேராவுக்கு அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், தேயிலை செய்கைக்கு தேவையான உரத்தை அந்த நிறுவனங்களின் தற்போதைய உற்பத்தி விலைக்கே வழங்குவதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.