சீனிக்கான விசேட வர்த்தக வரி 50 ரூபாவாக அதிகரிப்பு

ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட வர்த்தக வரி 50 ரூபாவாக அதிகரிப்பு

by Bella Dalima 02-11-2023 | 5:10 PM

Colombo (News 1st) இன்று (02)  முதல் அமுலாகும் வகையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட வர்த்தக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் சீனிக்கு 25 சதமாக காணப்பட்ட விசேட வர்த்தக பொருட்கள் வரி இன்று முதல் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று முதல் ஒரு வருடத்திற்கு அமுலாகும் வகையில், இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு மேலும் கூறியுள்ளது.