சுங்க வருமானம் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு உயர்வு

நாட்டின் சுங்க வருமானம் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு உயர்வு

by Bella Dalima 01-11-2023 | 3:59 PM

Colombo (News 1st) இலங்கை சுங்கத்தின் வருமானம் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் சுங்க வருமானம் 109 பில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாக சுங்க பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

ஒரு மாதத்தில் இலங்கை சுங்கம் பெற்ற அதிகபட்ச வருமானம் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வருட இறுதியில் சுங்க வருமானம் 925 பில்லியன் ரூபாவை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.