.webp)
-507287.jpg)
Colombo (News 1st) இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாலமொன்றின் மீது பயணித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே இருந்த ரயில்வே தண்டாவாளத்தில் வீழ்ந்துள்ளது.
இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் உள்ள வரலாற்று மையத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் தமது முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
