கலை நிலா உவைஸ் ஷெரீப் காலமானார்

கலை நிலா உவைஸ் ஷெரீப் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

04 Oct, 2023 | 5:18 pm

Colombo (News 1st) பிரபல வானொலி, தொலைக்காட்சி, மேடை அறிவிப்பாளரான கலை நிலா S.M.உவைஸ் ஷெரீப்  இன்று (04)  காலமானார். 

அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட அன்னார், அனுராதபுரம் ஸாஹிரா பாடசாலையின் பழைய மாணவர் ஆவார். 

கடந்த பல தசாப்தங்களாக வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை உள்ளிட்ட துறைகளில் அன்னார் தடம்பதித்துள்ளார். 

இவர் இந்திய மற்றும் உள்ளூர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கிய பல்துறை ஆற்றல் கொண்ட சிறந்த கலைஞராவார்.

கடந்த இரண்டு மாதங்களாக சுகயீனமுற்றிருந்த நிலையில், இன்று அதிகாலை கொழும்பு பிரண்டியாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

அன்னாரது ஜனாஸா இன்று பிற்பகல் கொழும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்