மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

by Bella Dalima 04-10-2023 | 4:37 PM

Colombo (News 1st) அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த Moungi G. Bawendi, Louis E. Brus, Alexei I. Ekimov ஆகிய மூன்று விஞ்ஞானிகள், வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தெரிவாகியுள்ளனர். 

குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 இன்று குவாண்டம் புள்ளிகள் நானோ தொழில்நுட்பத்தின் டூல் பெட்டியின் முக்கிய பகுதியாக உள்ளன. வேதியியலில் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் அனைவரும் நானோ உலகத்தை ஆராய்வதில் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.

குவாண்டம் புள்ளிகள் இப்போது QLED தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கணினி திரைகள் மற்றும் தொலைக்காட்சித் திரைகளை ஒளிரச்செய்கின்றன. மேலும் உயிரி வேதியியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உயிரியல் திசுக்களை வரைபடமாக்க  இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

குவாண்டம் புள்ளிகள் மனித குலத்திற்கு மிகப் பெரிய பயனைத் தருகின்றன. எதிர்காலத்தில் அவை நெகிழ்வான எலக்ட்ரானிக்ஸ், சிறிய சென்சார்கள், மெல்லிய சூரிய மின்கலங்கள் மற்றும் தகவல்தொடர்புக்கு பங்களிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.