இருவருக்கு உடலியல் /மருத்துவத்திற்கான நோபல் பரிசு

2023 ஆம் ஆண்டிற்கான உடலியல் / மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

by Bella Dalima 03-10-2023 | 5:05 PM

Colombo (News 1st) 2023 ஆம் ஆண்டிற்கான உடலியல் / மருத்துவத்திற்கான (Physiology or Medicine)  நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 2023 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று (02) முதல் வெளிவரத் தொடங்கியது. 

அமைதிக்கான நோபல் பரிசு மாத்திரம் நோர்வேயில் அறிவிக்கப்படும். 

இந்நிலையில், நேற்றைய தினம் உடலியல் / மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

ஹங்கேரியில் பிறந்த Katalin Karikó, அமெரிக்காவை சேர்ந்த Drew Weissman ஆகியோருக்கு இந்தப் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான mRNA தடுப்பூசி உருவாக்கத்திற்கு இவர்களது கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவியுள்ளது.