.webp)

Colombo (News 1st) புத்தளம் - உடப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்தில் உள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்ற பள்ளிவாசல்பாடு பிரதேச மீனவர்கள், கரையொதுங்கியிருந்த சடலத்தை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலத்தை அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
