Colombo (News 1s) மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, மாவடிமுன்மாரி கிராமத்தில் வெட்டப்பட்ட மரக்கிளையுடன் கீழே வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமத்தில் இன்று(02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சகோதர்கள் இருவர், விவசாய நடவடிக்கைக்காக தமது காணியை சுத்தம் செய்தபோது ஒருவர் அங்கிருந்த புளிய மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார்.
இதன்போது மரம் முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் இளைஞர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டார்.
சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.