English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
02 Oct, 2023 | 2:52 pm
Colombo (News 1s) துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின், தம்மிக முனசிங்க உள்ளிட்டோர் இன்று(02) கொழும்பின் சில இடங்களுக்குள் பிரவேசிப்பதை தடுத்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்ரஜித், அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 08 பேர் மற்றும் அவர்களுடன் வருகை தருவோர் இன்று(02) காலை 11 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பின் சில பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை தடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம், பித்தளைச் சந்தி முதல் என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், எஸ்.ஏ சுற்றுவட்டம் முதல் பாலதக்ஷ மாவத்தை வரையிலான பகுதி ஆகிய இடங்களுக்குள் பிரவேசிப்பதை தடுத்து இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளுக்குள் உள்நுழைவதைத் தவிர்க்குமாறும் பொதுச் சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களைத் தூண்டும் வகையில் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் குறித்த உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
30 Nov, 2023 | 03:16 PM
30 Nov, 2023 | 11:37 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS