ஸ்ரீ லங்கன் விமான பயணம் இரத்து; பயணிகள் அசௌகரியம்

ஸ்ரீ லங்கன் விமான பயணம் இரத்து; பயணிகள் அசௌகரியம்

ஸ்ரீ லங்கன் விமான பயணம் இரத்து; பயணிகள் அசௌகரியம்

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2023 | 4:11 pm

Colombo (News 1st) ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான மற்றுமொரு விமானத்தின் பயண நடவடிக்கை நேற்று (29) இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

பல நாட்களாக நிலவி வரும் இந்த நெருக்கடி குறித்து துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் திரு. நிமல் சிறிபால டி சில்வாவிடம் வினவப்பட்டது.

இப்பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார். 

எவ்வாறாயினும், கடந்த சில நாட்களாக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்