நீதிபதி T.சரவணராஜாவிற்கு உயிர் அச்சுறுத்தல்; விசாரணை நடத்துமாறு ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

நீதிபதி T.சரவணராஜாவிற்கு உயிர் அச்சுறுத்தல்; விசாரணை நடத்துமாறு ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

நீதிபதி T.சரவணராஜாவிற்கு உயிர் அச்சுறுத்தல்; விசாரணை நடத்துமாறு ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2023 | 5:57 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய T.சரவணராஜாவிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். 

அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பில் பிரஸ்தாபிக்கவுள்ளதாக அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நீதிபதிகளுக்கு எதிரான அச்சுறுத்தலானது நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்